ரயில்வே திணைக்களத்தில் பணிபுரியும் சகல ஊழியர்களுக்கும் காப்புறுதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சீ.பீ. ரதநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரல்வே ஊழியர்களின் பிள்ளைகளுக்காக விசேட புலமை பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

