ஆப்கானிஸ்தான் – தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 போலீசார் பலி

50 0

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 12 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவர்களை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினர், போலீசார் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடி ஒன்றில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 12 போலீசார் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.