சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

342 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலை குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.