இலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் கடுமையாக பாதிப்பு

299 0

இலங்கையின் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான கௌரவம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் மதிப்புரையை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளின் மனித உரிமைகளை மதிப்பீடு செய்து 2020 ஆண்டுக்கான அறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை கடந்த ஆண்டுகளில் செய்த முன்னேற்றம் தலைகீழாக மாறக்கூடும் என்ற அச்சம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவின் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசினால் உறுதியளிக்கப்பட்ட யோசனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தால் அது நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்க முடியாது என அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.