பட்டம் பெற்ற அனைத்து தேரர்களும் பாடசாலை ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்படுவார்கள்!

254 0
பட்டம் பெற்றுள்ள அனைத்து தேரர்களையும் பாடசாலை ஆசிரியர்களாக உள்ளீர்க்க எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் தலைமை தேரராக தெரிவு செய்யப்பட்டுள்ள சாஸ்ரபதி கொனதுவே குணாநந்த தேரரை வரவேற்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் இடம்பெற்ற போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மல்வத்து பீட அநுநாயக்க தேரர் நியாங்கொட விஜித்தசிறி தேரரும் பிரசன்னமாகியிருந்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், அறநெறி கல்வியை மேம்படுத்தி அதன்னூடாக பிள்ளைகள் சமயம் தொடர்பான கல்வியை ஆழமாக கற்றுக்கொள்ள வழிசெய்வதற்கான பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு சமூக பிரச்சினைகளின் போது தேரர்களின் ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு கிடைத்தாக தெரிவித்த பிரதமர், அதன் காரணமாக அறநெறி பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க தேவையான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

கடந்த காலங்களில் பட்டம் பெற்ற இராணுவத்தினரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் நியமித்தாகவும் அவர் தெரிவித்தார்.

பௌத்த பிள்ளைகள் விஹாரைகளுக்கு செல்வதை நோக்காக கொண்டே பௌர்ணமி தினங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறினார்.