தும்மலசூரிய, இகல கடிகமுவ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் போரா 12 வகை 6 தோட்டாக்களை ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

