பெற்றோரின் கவனயீனத்தால் பரிதாபமாக பலியான பிஞ்சு குழந்தை!

269 0

பகமுண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புவக்கஹ உல்பத, தெற்கு பிரதேசத்தில் வீட்டில் இருந்த ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்று கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

குழந்தை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பகமுண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு (10) 7.15 மணிக்கு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சடலம் பகமுண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பகமுண பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.