கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தானும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஒலிப்பதிவு தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லவே தான் அழைப்புகளை எடுத்திருந்தேன். எனவே தான் மேற்கொண்ட அழைப்புகள் தொடர்பாக அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

