வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

281 0

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன், சந்தேக நபர் ஒருவர் கைது சிலாபத்தில் நேற்று (10) செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிங்கபுர பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 229 பொதிகளில் அடைக்கப்பட்ட 45800 வெளிநாட்டு சிகரட்கள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ௯றினர்.

சிலாபம் பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்