பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் சுயாதீன ; விசாரணைகள் நீதிக்கட்டமைப்புடன் முன்னெடுக்கப்பட்டு விரைவில் உண்மைத்தன்மை பகிரங்கப்படுத்தப்படும் என அரசாங்க ; பேச்சாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு கடந்த அரசாங்கத்தில் அலரிமாளிகையில் வகுக்கப்பட்ட சூழ்ச்சிகள் அனைத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் ; ரஞ்சன் ராமநாயக்க ; பிரதான பங்கு வகிக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கைன் போதைப்பொருள் பாவிப்பதாக குறிப்பிட்டு ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் மத்தியில் அவபெயரை ஏற்படுத்தினார். பின்னர் இக்குற்றச்சாட்டுதொடர்பில் ஆராய கடந்த அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களைகுறிப்பாக ஐக்கியதேசிய கட்சியினரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது
குழுவின் அறிக்கை என்ன ஆனதுஎன்பது இறுதி வரையில் வெளிப்படுத்தப்படவில்லை.
ஒட்டுமொத்த பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் கடந்த அரசாங்கத்தில் இவர் ; பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதற்கும் எவ்வித நடவடிக்கையினையும் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கவில்லை மாறாக உண்மையனை மூடி மறைக்க குழு மாத்திரமே நியமிக்கப்பட்டது.
அக் குழுவிற்கும் என்ன ஆனது என்பது தெரியவில்லை. பிறர் மீது சேறுபூசி அதில் அரசியல் இலாபம் தேடிக் கொள்வது ; ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உபாயமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

