புகையிரத தண்டவாள பாதைகள் இன்னும் இருமாத காலத்திற்குள் நவீனமயப்படுத்தப்படுவதுடன், புகையிரத சாரதிகளாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாநயக்க தெரிவித்தார்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட புகையிரத தண்டவாள பாதைகளே இன்றும் காணப்படுகின்றன. பல வருட காலமாக இப்பாதைகள் சீர்திருத்தம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக புகையிரத சேவையில் பல நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளன.
புகையிரத தண்டவாள பாதைகளை நவீனமயப்படுத்தி புகையிரத சேவையினை வினைத்திறனாக மாற்றியமைக்கும் யோசனை ;போக்குவரத்து அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆரம்பகட்டமாக புகையிரத பாதையினை நவீனமயப்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாத காலத்திற்குள் இச்செயற்திட்டம் முழுமைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

