மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் நீர் கசிவு தொடர்பாக நேற்றய தினம் புவி தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார்.
நீர் கசிவிற்கு , கசிவின் திசை மற்றும் ஆழம் காரணமாக நிலத்தில் உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு காரணங்களின் மூலம் இவ்வாறு நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதா என நவீன உபகரணங்களை கொண்டு ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ; பணிப்பாளர் தெரிவித்தார்.
மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வினை தொடர்ந்து ; மகாவலி திணைக்களத்திடம் நீர்க்கசிவிற்கான காரணம் சம்பந்தப்பட்ட விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ; தெரிவித்தார்.

