O/L மாணவர்களுக்கு NIC பெற்றுக்கொள்ள விசேட செயற் திட்டம்

253 0
இந்த ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்க விசேட செயற் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள அலுவலகத்தில் அல்லது தெற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள அலுவலகங்களுக்கு ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.