நற்பெயரை கொண்டு கடன்பெறும் முறைமை அறிமுகம்

263 0
கடன் வழங்கும் நபர்கள் தொடர்பில் விசேட மதிப்பீட்டு பிரிவொன்றை இன்று (09) முதல் அறிமுகப்படுத்துவதாக இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடன் பெறும் நபர்களுக்கு ´மதிப்பெண்´ ஒன்று வழங்கப்படவுள்ள நிலையில் அதனூடாக எளிதாக கடன் பெற முடியும் என அந்த பணியகத்தின் பொது மேலாளர் நந்திமித்ர அந்தோணி தெரிவித்துள்ளார்.

அதன்படி, தனி நபர்களின் நற்பெயரை கடன் பெறும் போது பாதுகாப்பாக முன்வைக்க சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த கடன் ´மதிப்பெண்´ முதன்முறையாக இன்று (09) அறிமுகப்படுத்தப்படும் நிலையில், இது வளர்ச்சியடைந்த நாடுகளில் கடன் சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் கடன் இடர் மேலாண்மைக்காக பயன்படுத்தப்படும் உயர் நிதி முறைமையாகும் என தெரிவித்தார்.

இந்த கடன் மதிப்பெண் பணியகத்திற்கு சொந்தமான உங்கள் கடன் தகவல்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது என தெரிவித்தார்.