கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

263 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்று வெளிநோயாளர் பிரிவைப் பார்வையிட்ட அவர், வைத்தியர்களை சந்தித்து மக்களின் நலன்கள் குறித்து கேட்டறிந்தார்.

அத்தோடு மக்களை சந்தித்து மக்களின் நலன்கள், தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் வைத்தியசாலையின் நடவடிக்கைகள், நிர்மாணப் பணிகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேள்வி எழுப்பினார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விசேட பொருளாதார மையம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட பல இடங்களுக்கு இவ்வாறு திடீர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.