5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
நேற்று (07) குறித்த பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பெறுபேறுகள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

