6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்கேநபர்கள் நிட்டம்புவ, ஊராபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றினால் நேற்றிரவு (07) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (08) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

