பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியை பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியான துஷித்த திலும் குமாரவுக்கு வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றப்பிரிவு முன் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியான துஷித்த திலும் குமார என்பவர் கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

