திருத்தப்பணி காரணமாக கொழும்பை அண்டிய சில பகுதிகளில் நாளை (07.01.2020) 24 மணி நேர நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டு நாளை காலை 9 மணி முதல் மறுநாள் புதன்கிழமை (08.01.2020) காலை 09 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தெகொடை, ஹோமகம, மீபே, பாதுக்க ஆகிய பகுதிகளில் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், கலட்டுவாவவிலிருந்து மஹரகாகம வரை நீரைக் கொண்டு செல்லும் நீர்வழங்கல் பாதையில் இடம்பெறும் திருத்தப்பணிக்காரணமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

