மணல் விலையை கட்டுப்படுத்த புதிய முறைமை

282 0

மணல் விலையை கட்டுப்படுத்துவதற்காக புதிய முறைமையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் பொறியியலாளர் அனுர வல்பொல இதனை தெரிவித்துள்ளார்.

மணல் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் ஊடாக குறைந்த விலைக்கு மணலை பெற்றுக் கொடுக்க சந்தர்ப்பம் நிலவுதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையின் கீழ் 03 கியூப் மணலை 42,000 ரூபாவிற்கு பாவனையாளருக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிவாரணத்தை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுங்கப் பணியகத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.