ஈஸ்டர் தாக்குதல் குறித்து மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்

286 0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய குறித்த விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 305 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பேராசிரியர் ரொஹான் குணரத்ன மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பலர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.