வெவ்வேறு வாகன விபத்துக்களில் மூவர் பலி

285 0

தம்புள்ளை அனுராதபுரம் வீதியின் கெகிராவை திப்படுவெவ பிரதேசத்தில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கெகிராவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், புத்தளம் – வனாதவில்லுவ வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மாடொன்றின் மீது மோதி இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரத்தொட ஹுனுகெட்டஹெல குகுருமான சந்தி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.