இந்நிலையில், ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் தோற்றிச் சித்தியடைந்த மாணவர்களுக்கு 6 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை இவ்வுதவித் தொகை வழங்கப்படும்.

குறித்த உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள  ஒவ்வொரு மாணவர்களும் மாதாந்தம் வவுச்சர் மூலம் விண்ணப்பிக்கும் முறையானது இதுவரைகாலமும் இருந்தது. இதனால் கால தாமதம், சிரமங்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது. இதனைத் தவிர்க்க தற்போது இணையவழி மூலமாக மாணவர்களின் கணக்கில் நேரடியாக மாற்றக் கூடிய வகையில் இலகு முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து சகல அரச பாடசாலைகளுக்கும் இணையவழி மூலமாக உதவித் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.