காலி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள தலாபிடிய ரயில் நிலையத்திற்கு அருகில் பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் காலி-தலாபிடிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

