‘சுனாமி’ இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள்

272 0

´சுனாமி´ அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை என்ற பேரனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன.

இதனை முன்னிட்டு, தேசிய பாதுகாப்புத் தினம் இன்று நாடு முழுவதிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு நினைவுதின நிகழ்வுகளும், மத அனுஷ்டானங்களும் இடம்பெற்று வருகின்றன.

தேசிய பாதுகாப்புத் தினத்தின் பிரதான நிகழ்வு காலி, பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூபிக்கு அருகில் காலை 9 மணிக்கு இடம்பெறுகின்றது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.