சந்தேகத்துக்கு இடமான ஐவர் வேனுடன் கைது

284 0

கடந்த 24 ஆம் திகதி ஜா-எல பகுதியில் கடற்படை நடத்திய விசேட சோதனையின் போது 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி, ஜா-எல ரத்னாவாலி சினிமாவுக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை கடற்படை சோதனையிட்டதுடன், சந்தேக நபர்களை மேலும் விசாரித்த போது, சந்தேக நபர்கள் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கடற்படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 28 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்குளிய மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் வேனுடன் ஜா-எல பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.