நேற்று இரவு முதல் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 225 பேர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவ்வாறு மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டுப்பிடிப்பதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு இலட்சம் பரிசோதனை பலூன்கள் விநியோக்கிப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே இவ்வாறு மதுபோதையில் வாகனம் செலுத்திய 225 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

