சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

258 0

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்புளூயன்ஸா வைரஸ் நோய் தொற்று தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இன்புளூயன்ஸா நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்புளூயன்ஸா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக கர்ப்பிணி தாய்மார்கள், இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கும் மேற்பட்டோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள், நீண்டகால இதய நோய், கல்லீரல், சிறுநீரகம், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளவர்கள் இது தொடர்பில் விசேடமாக அவதானம் செலுத்த வேண்டும்.

அவ்வாறான நபர்கள் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் ஆகிய நோய் நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.