இராணுவ சிப்பாயின் கழுத்தை வெட்டி துப்பாக்கி கொள்ளை!

291 0

வவுனியா போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய துப்பாக்கியும் பறித்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள 7 ஆவது சிங்க றெயிமென்ட் இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் இன்று காலை தனது பணி முடிந்ததுதும் இராணுவ முகாமை நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது இனம் தெரியாத நபர்கள் அவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளதுடன், அவரது துப்பாக்கியினையும் பறித்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் எம்.ரத்நாயக்க வயது 24 என்ற இராணுவ வீரரே படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.