நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளமையால், திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயளார் பிரிவிலுள்ள சோலை வெட்டுவான், மயிலப்பன் சேனை, பூவரசன் தீவு, மஜீத் நகர், தீனேறி, கண்டல்காடு போன்ற பகுதிகள் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் வெளியேறுமாறும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் அவ்வப்போது விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பிரதேச செயலாளர் முகம்மது கனி அறிவித்துள்ளார்.
மேலும், கிண்ணியா பிரதேசத்தில் சில இடங்களில் தரை மார்க்க பாதைகள் நீரினால் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

