9,962 குடும்பங்களைச் சேர்ந்த 34,842 பேர் பாதிப்பு!

256 0

நாட்டில் கடந்த 02 ஆம் திகதி வரை இன்று காலை 9.00 மணிவரையான காலப் பகுதியில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணான உண்டான அனர்த்தங்களினால் 12 மாவட்டங்களில் 9962 குடும்பங்களைச் சேர்ந்த 34,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, குருணாகல், புத்தளம், கேகாலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

மேலும் 49 வீடுகள் முற்றாகவும், 1017 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. இதேவேளை இந்த அனர்த்தம் காரணமாக 4904 குடும்பங்களைச் சேர்ந்த 16892 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.