நாடு முழுவதும் பெய்த கன மழையால் ஆறு முதன்மை நீர் மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் 94 சதவீதம் வரை உயிர்வடைந்துள்ளதாக மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி சமனலவேவா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 100 சதவீதமாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 93 சதவீதமாகவும், மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 93 சதவீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 89 சதவீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 95 சதவீதமாகவும், ரந்தினிகல நீர்த்தேக்கதின் நீர்மட்டம் 95 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது.
இதேவேளை தொடரும் சீரற்ற காலநிலையால் பதுளை, மொனராகலை, தியத்தலாவை மற்றும் கண்டியில் உள்ள சில இடங்களில் மின் இணைப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளது.

