வழமைக்கு திரும்பியது பதுளை – பசறை வீதி

436 0

மூடப்பட்டிருந்த பதுளை –  பசறை வீதி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஏற்ப்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டதோடு , மீண்டும் அப்பகுதிக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே மண்சரிவு எச்சரிக்கை தளர்த்தப்பட்டு, வீதி சீர் செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அப்பகுதிக்கான சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.