அரசியல் பழிவாங்கல்கள் ஒருபோதும் இடம்பெறாது- நாமல்

282 0

இந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்கள் ஒருபோதும் இடம்பெறாதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியைப் போன்று அதிகாரத்தை பயன்படுத்தி விசேட நீதிமன்றத்தை அமைத்து இல்லாவிடின் விசேட பொலிஸ் பிரிவை அமைத்து பொய்யான விசாரணை நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய தேவை கிடையாது.

அதாவது, அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து, அரச ஊழியர்கள் அச்சுறுத்தி பொய்யான சாட்சியங்களை உருவாக்க வேண்டிய  அவசியமும் எமக்கு இல்லை.

அந்தவகையில் அன்றும் கூறியதைதான் நாம் இன்றும் கூறுகின்றோம். நாம் பழிவாங்கள் நோக்கத்தில், எந்ததொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.

மேலும் நீதியை நிலைநாட்டுவதற்கு பொலிஸாரினால் முடியும். ஆகையால் அதில் எந்ததொரு பிரச்சினையும் இல்லை.

கடந்த ஆட்சி காலத்தில் ஐ.தே.க.வே அரசியல் பழிவாங்களில் ஈடுபட்டது. நாம் ஒருபோதும் அவ்வாறு செயற்படமாட்டோம்

இதேவேளை அரசியல் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை” என குறிப்பிட்டுள்ளார்.