கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கொழும்பு மாவட்ட செயலகத்தில்  கூட்டமொன்று இடம்பெற்றது.

மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் , இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டு பூர்த்திச் செய்யப்படாமல் இருக்கும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதேவேளை இந்த செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு பாதகமாக இருக்கும் விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதுடன் , இவற்றை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான முயற்சிகளை எடுக்கலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்விலே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் , கொழும்பு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட கொழும்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் , பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.