அதனால் ஜனாதிபதி இதுதொடர்பாக கவனம் செலுத்தவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நகர்புரங்களில் வெறுமையாக இருக்கும் மதில்கள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மிகவும் அசிங்கமாகவே காட்சியளித்துக்கொண்டிருந்தன.

ஆனால் இவ்வாறு அசிங்கமாக இருக்கும் நகரத்தை அழகுபடுத்தும் நோக்கத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய வீதியோரங்களின் மதில்கள் மற்றும் மேம் பாலங்களின் சுவர்களில் இளைஞர்கள் சித்திரங்களை வரைந்து வருன்றனர். இது வரவேட்கத்தக்கது.

ஆனால் சித்திரம் வரைவதென்ற பெயரில் முஸ்லிம் பள்ளிவாசல் மதில்களில் உருவப்படங்களை வரைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இஸ்லாமிய கலாசாரத்தின் பிரகாரம் உருவப்படங்கள் வரைவதில்லை. முஸ்லிம்கள் தங்களின் வீடுகளிலும் உருவப்படங்களை வைத்துக்கொள்வதில்லை. அது அந்த மார்க்கத்தின் வழிமுறை. அதற்கு நாங்கள் மதிப்பளிக்கவேண்டும்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேவல்தெனிய பள்ளிவாசல் மதிலில் இவ்வாறு உருவப்படங்கள் அடங்ய சித்திரம் வரையப்பட்டிருக்கின்றது.

அந்த பிரதேசத்தில் முஸ்லிம்கள் சிறிதளவானவர்களே வாழ்ந்து வருகின்றனர். அதனால் அவர்கள் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாது அச்சத்தில் இருந்துள்ளனர்.

அத்துடன் பள்ளிவாசல் மதிலில் வரைவதற்கு முன்னர் அந்த பள்ளிவாசல் நிர்வாகத்திடம் அதற்கான அனுமதியை பெற்றிருக்கவேண்டும்.

அவ்வாறு எதுவும் இல்லாமல் தாங்கள் நினைத்த பிரகாரம் இவ்வாறு செய்வது மனித உரிமை மீறலாகும். இதுதொடர்பாக தெளிவுபடுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்ப இருக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன் சிறுபான்மை மக்கள் தங்களுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அதனை நாங்கள் வரவேட்கின்றோம். ஆனால் அதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத பிரசாரங்களை தடுக்கவேண்டும். அதேபோன்று சிறுபான்மை மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும்  அச்சத்தை போக்கும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்றார்.