புத்தளம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு நால்வர் காயம்!

199 0

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற காரும் கொழும்பில் இருந்து எரி பொருட்களை ஏற்றி வந்த பவுசரும் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(திங்கட்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.