சுவிஸ் தூத­ரக அதி­காரி விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­வ­ராக நானே இருக்­கின்றேன்!

193 0

சுவிஸ் தூத­ரக அதி­காரி விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­வ­ராக நானே இருக்­கின்றேன். இது­வரை நடை­பெற்ற  விசா­ர­ணை­ க­ளி­லி­ருந்து அவ்வா­றான  சம்­பவம் ஒன்று  இடம்­பெ­ற­வில்லை என்­பது உறுதியாகியி­ருக்­கி­றது.

இந்த விட­யம்­தொ­டர்பில்  சுவிஸ் தூது­வரை இன்று சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளேன்.விசா­ர­ணை க்கு குறித்த அதி­கா­ரியை பூர­ண­மாக  ஒத்­து­ழைக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ  தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் தேசிய பத்­தி­ரி­கை­க­களின் ஆசி­ரி­யர்­களை நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே  அவர்  இவ்­வாறு  தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்;

சுவிஸ்  தூத­ரக  பெண் அதி­காரி  கடத்­தப்­பட்­ட­தாக  கூறப்­படும்  சம்பவத்தில்  பாதிக்­கப்­பட்­ட­வ­னாக நானே இருக்­கின்றேன். இது­வரை நடை­பெற்ற விசா­ர­ணை­களில்  அவ்­வா­றான ஒரு சம்­பவம் நடை­பெ­ற­வில்லை என்­பது  நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.   தொழில்­நுட்ப ரீதி­யான சாட்­சிகள், சிசி.ரி.வி. ,  தொலை­பேசி,  ஊடான   சாட்­சி­யங்கள் ஊபர் சார­தியின்  சாட்­சியம்  அந்த சாரதி   தெரி­வித்த  குறித்த அதி­காரி சென்ற வீட்­ட­ரது சாட்­சி­யங்கள் என்­ப­வற்றை வைத்துப் பார்க்கும் போது  சம்­பவம் இடம்­பெ­ற­வில்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.   சுவிஸ் தூத­ர­க­மா­னது பொறுப்­புடன்  செயற்­பட்­டி­ருக்­க­வேண்டும்.  சுவிஸ் தூதுவர்  பிர­த­மரை சந்­தித்து   சம்­பவம் தொடர்பில் விசா­ரணை வேண்டும் என்று கோரி­யி­ருந்தார். இதற்­கி­ணங்க  உயர்­மட்ட விசா­ரணை இடம்­பெற்­றது. விசா­ர­ணையின் பின்  அவ்­வா­றான சம்­பவம் இடம்­பெ­ற­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கின்­றது.

இன்­றைய தினம் சுவிஸ் தூது­வரை சந்­தித்து இவ்­வி­டயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன் விசா­ர­ணைக்கு   ஊழி­யரை ஒத்­து­ழைக்­கு­மாறு    தெரி­விக்­கும்­படி அவ­ரிடம் நான் கேட்­டுக்­கொண்டேன்.

இந்த சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் சுவிஸ் தூத­ர­கத்தை குற்­றம்­சாட்ட முடி­யாது. தூத­ர­கத்தின்  ஊழியர் ஒரு­வ­ருக்கு சம்­பவம் நடந்­தி­ருந்தால் அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது தூத­ர­கத்தின் கட­மை­யாகும். இதற்­கி­ணங்­கவே  தூத­ரகம் செயற்­பட்­டி­ருந்­தது. நாமும் எமது கட­மை­யினை செய்­தி­ருந்தோம்.

இந்த விட­யத்தில்  நான்தான்  பாதிக்­கப்­பட்­ட­வ­னாவேன். நான் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­வுடன் கண்­களை கட்டி துப்­பாக்கி முனையில் கடத்­தப்­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது. முறைப்­பாடு தெரி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே நியூயோர்க்  டைம்ஸ் பத்­தி­ரி­கையில் கடத்தல் குறித்து  செய்தி  வெளி­யா­கி­யி­ருந்­தது. முன்னாள் அமைச்­சர்­களும் இதற்கு எதி­ராக கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர். சஜித் பிரே­ம­தாஸ கூட கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த சம்­பவம் குறித்த விசா­ர­ணைக்கு குறித்த ஊழியர் ஆத­ர­வாக இல்லை. விசா­ர­ணை­க­ளின்­போதும் சுக­வீ­ன­மாக உள்­ள­தா­கவும் வேறு கார­ணங்­க­ளையும் அவர் கூறி வரு­கின்றார். இது­வ­ரை­யான தொழில்­நுட்ப ரீதி­யான சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில்  இவ்­வா­றான சம்­பவம் இடம்­பெ­ற­வில்லை என்றே தெரி­கின்­றது.  ஏன் இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் அந்த ஊழியர் ஈடு­பட்டார் என்­பது குறித்து ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. சரி­யான முழு­மை­யான  விசா­ரணை முடி­வுக்கு வந்த பின்­னரே  இது குறித்து  தெரி­ய­வரும்.

கேள்வி: தேர்தல்  பிர­சா­ரத்­தின்­போது  வெள்­ளைவான் விவ­காரம் தொடர்பில்   முன்னாள் அமைச்சர்  ராஜித சேனா­ரட்ன செய்­தி­யாளர் மாநாட்டில் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.   அந்த  குற்­றச்­சாட்­டுக்கும் சுவிஸ் தூத­ரக ஊழியர் கடத்தல் விவ­கா­ரத்­திற்­கு­மி­டையில் தொடர்பு இருக்­குமா?

பதில்: முத­லைக்­க­தைக்கும்  இந்த சம்­ப­நத்­திற்­கு­மி­டையில் தொடர்பு இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன அர­சி­யல்­வாதி,  அர­சி­யலில்  பொய் சொல்­வது என்­பது வழ­மை­யான  செயற்­பாடு.  இந்த கலா­சா­ரத்தை  மாற்­றி­ய­மைக்­கவே நான் விரும்­பு­கின்றேன். தேர்தல் பிர­சா­ரக்­கா­லத்தில் இவர்கள் மேற்­கொண்ட இத்­த­கைய பொய்ப்­பி­ர­சா­ரங்­களை மக்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. வெள்­ளைவேன் கடத்தல்  தொடர்­பான  செய்­தி­யாளர் மாநாடு இடம்­பெற்­ற­தை­ய­டுத்து எனக்கு 2 இலட்சம் வாக்­குகள் வரையில் கூடு­த­லாக கிடைத்­தது.  இதே­போன்று நாலு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க முடியும் .

தமிழ், முஸ்லிம் மக்கள்   சுதந்திரமாக  வாக்களிப்பதற்கு  அனுமதிக்கப்பட்டிருந்தால்  எனக்கு  இன்னும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும். அழுத்தங்கள் காரணமாகவே தமிழ், முஸ்லிம் மக்கள் இவ்வாறன தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். சிங்கள மக்கள்  அரசியல்வாதிகளின் பொய் குற்றச்சாட்டுக்களை  ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள்  அவற்றை நிராகரித்து வாக்களித்துள்ளார்கள்.