தப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதி மீது துப்பாக்கிச் சூடு

215 0

தப்பிக்க முற்பட்ட சிறைக் கைதி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த கைதி படுகாயமடைந்துள்ளார்.

 

ஹோமாகம நீதிமன்றத்தில் இருந்து கைதி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறைக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தப்பது.