வைத்தியர் ஷாபி தொடர்பில் மீண்டும் CID விசாரணை

416 0

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வைத்தியர் ஷாபி மீதான வழக்கு இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இந்த இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வைத்தியர் ஷாபி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டிருந்த விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்து நீதிமன்றத்தினால் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது