கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தங்கபிஸ்கட்டுகளை மிகவும் சூட்சுமமாக மின் விசிறி பெட்டியில் மறைத்து இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக சுங்க வரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருணாகல்- புத்தளம் பகுதியை சேர்ந்த 45 வயதான பொறியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் அவுஸ்ரேலியாவிலிருந்து சிங்கபூர்க்கு சென்று அதன் வழியாக இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் விமான நிலையத்தில் மின் உபகரணங்களை விற்பனை செய்யும் ஹெம்பிலி பிட்டியை சேர்ந்த 30 வயதான வியாபாரியிடம் தான் கொண்டு வந்த மின் விசிறி பெட்டியை தனது நண்பரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார் .
குறித்த வியாபாரி மின் விசிறி பெட்டியை எடுத்து கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மின் விசிறி பெட்டியில் 100 கிராம் அடங்கிய 99 தங்கப்பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்தாக மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த ஒரு தொகை பிஸ்கட்டுகளும் பரிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மேலதிக பரிசோதனைக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

