கிழக்கு மாகாண ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

265 0

கிழக்கு மாகாண ஆளுநராக அம்மணி அனுராதா யகம்பத் இன்று காலை 10.00 மணியளவில் திருகோணமலையிலுள்ள தமது அலுவலகத்தில் உத்தியோக பூர்வமாக தமது கடமையை பொறுப்பேற்றார்.கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட நிலையிலே இன்றைய தினம் அனுராதா யஹம்பத் தனது உத்தியோக பூர்வ கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.