தேயிலை இறக்குமதி, மீள் ஏற்றுமதிக்கு தடை

258 0

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேயிலை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளதாக  அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.