மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

256 0

பதுளை – மஹியாங்கனை பிரதான வீதியின் துங்ஹித வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த வீதியின் ஒரு மருங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதாக செய்தியாளர் கூறினார்.

இதனால் மிகுந்த அவதானத்துடன் இந்த வீதியை பயன்படுத்துமாறு பதுளை பொலிஸார் வாகன சாரதிகளையும், பொது மக்களையும் கேட்டுள்ளனர்