பொலிஸ் உத்தியோகத்தர்கள் 60 பேருக்கு இடமாற்றம்

321 0

உடன் அமுலுக்குவரும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நால்வர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 60 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்களை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நால்வருக்கு மேலதிகமாக எட்டு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளும், 11 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் உதவி பொலிஸ் அதிகாரிகள் 18 பேருக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 20 பேர் உள்ளிட்ட 60 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.