ஹாலி – எல ரொக்கத்தென்ன தோட்டத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக ஹாலி – எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொக்கத்தென்ன பழையப்பிரிவில் முன்பள்ளி ஒன்றை நடத்திவந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
34 வயதான திருமணமாகாத ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஆசிரியையின் சடலம் தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஹாலி எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

