பல நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகளின் கீழ் பொது மக்களின் பணத்தை சேமிக்கும் செயற்பாடுகள் குறித்து இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
அங்கிகரிக்கப்பட்ட பணத் தாள்கள், கடன் மற்றும் கடன் பத்திரங்களை வழங்குவதன் மூலம் அதிகளவு பணம் சேகரிக்கப்படுவதுடன், அது தொடர்பில் அதிக நன்மைகளை பெற்றுக்கொடுப்பதே இதன் பிரதான அம்சமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால் சில நிறுவனங்கள் பொதுமக்களுக்கு போதுமான மற்றும் சரியான தகவல்களை வௌிப்படுத்தாமல் பண வைப்புகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஆகவே முதலீட்டு நடவடிக்கையுடன் தொடர்புடைய ஆவணங்கள், அவற்றின் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் இதர நன்மைகள், முதிர்ச்சியடைந்த அல்லது அதற்கு முன்னரான பணம் மீள பெறும் திறன் ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் அவ்வாறான நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்பிலிடுமாறு மத்திய வங்கி பொது மக்களை கேட்டுள்ளது.

