கனடா, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள் ராஜபக்ஷவை சந்திப்பு

42 0

கனடா, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இதன்படி, இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின் இன்று (புதன்கிழமை) பிரதமரை சந்திருந்தார்.

அலரிமாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்புக்களில் அரசியல், கல்வி, முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருதரப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் அமீதுல்லா பிரதமரை சந்தித்து வர்த்தகம், பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதோடு பிரதமரை பங்களாதேஷ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு அழைத்து கடிதத்தையும் கையளித்தார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோனா கெம்ப்க்கர்ஸ் சந்தித்த போது, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். அத்தோடு பொருளாதார விடயங்களில் நியூசிலாந்து தொடர்ந்தும் இலங்கைக்கு உதவும் என்றும் கூறினார்.