ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது

38 0
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேனவின் ஆலோசனையின் படி கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய புத்தளம் பிரிவின் விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் , கடற்படை புலனாய்வு பிரின் அதிகாரிகளின் உதவியுடன் புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மன்தலுவ, தம்பபண்ணி தோட்டம் பிரதேசத்தில் வைத்து 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், நுரைச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலுக்காபள்ளம பிரதேசத்தில் 102 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 750 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நீண்ட காலமாக இந்த பொதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.