கட்சி பொதுச் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

40 0

சகல அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக இன்று (04) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் முற்பகல் 10 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பொது தேர்தல் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் புதிய தேர்தல் சட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களை காலத்தின் தேவைக்கருதி திருத்தி அமைப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களுக்காக செலவிடும் பணத்தை மட்டுப்படுத்துவது குறித்தும் அதற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டவிதிமுறைகள் தொடர்பிலும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.